ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஈடாகுமா? என்ற தேர்தல் விழிப்புணர்வு படம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ஜீவரேகா குறும்படத்தை வெளியிட்டார். படத்தின் இயக்குநர் அபிஷ் விக்னேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் தொண்டு நிறுவன ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் ராமச்சந்திரன், குறும்பட உதவி இயக்குநர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


