வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரலில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில்,
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு இலவச பேருந்து வசதி, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு கீழே இருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி, கொரோனாவை கட்டுப்படுத்த தனித்தனி முகாம்கள் அமைத்து அனைவரையும் தடுப்பூசி செலுத்த வைத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது இந்த அரசுதான் என்று தெரிவித்தார். மேலும் இந்த ஏரல் பகுதியில் தாமிரபரணியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் வழங்கவும், சந்தைப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் அமைக்கவும் அனைவரும் திமுக மற்றும் அதனை சார்ந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.