
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பகுதி – 1
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக மாறியவர் ரஜினிகாந்த்.
அதுபோல பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும் வரலாற்று ஆய்வாளராகவும் பயணிக்கும் தங்களின் கட்டுரை தொடர் சிறக்க வாழ்த்துகள்.???
சிரமம் மிகுந்த இளமை காலத்தில் செய்த பலதரப்பட்ட வேலைகளுக்கு மத்தியில் பத்திரிகை, மற்றும் வானொலிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும், துணுக்குகளும் , தங்களின் எழுத்துப் பணியை துவக்கி வைத்தன என்பதை அறிந்தோம்.
அத்துடன் மும்பையில் பணிபுரிந்தாலும் மராட்டிய மண்ணில் மையம் கொள்ளாமல் தாமிரபரணி மீது கொண்ட தாகத்தால் பரணி பாயும் தரணியிலேயே வாழ்வை தொடர வைராக்கியம் கொண்டது ஒரு வரம்.
“வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்” தொடர் எழுதி அதையே முதல் புத்தகமாக வரச் செய்து இன்று 54 வயதில் 54 புத்தகங்கள் வரை எழுதி எழுத்துலகை பிரம்மிக்க வைத்து வருகிறீர்கள்.
தலை தாமிரபரணி மற்றும் நவீன தாமிரபரணி மஹாத்மியம் ஆகிய இரு முக்கிய நூல்கள் பற்றிய தந்த தகவல்கள் சிறப்பு.
இலக்கிய செம்மல்,
தமிழ் ரத்னா,
தமிழ் மாமணி,
பதிவு செம்மல், தன் பொருநை கலைச்செல்வர், எழுத்து
சித்தர், மற்றும் தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது உள்ளிட்ட பெருமை சேர்க்கும் விருதுகளின் பட்டியல் மேலும் தொடரட்டும்.
1986 ல் தொடங்கிய தாமிரபரணி ஆற்றங்கரையோர பயணங்களும், அதன் சுவாரசிய பக்கங்களையும் பதிவு செய்யும் தங்களின் இந்த சிறப்பு மிக்க கட்டுரையை படிக்க காத்திருக்கிறோம்.??????
நன்றி
ராஜ.சுரேஷ்.
நெல்லை.
13/02/22