கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில சீனியர் ஹாக்கி தொடரில் தூத்துக்குடி, அரியலூர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை மைதானத்தில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில சீனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் பல்வேறு மாவட்ட அணிகள் மோதின.
தூத்துக்குடி – விழுப்புரம்: 5-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரியலூர் – நீலகிரி: பரபரப்பான ஆட்டத்தில் 6-4 என்ற கோல் கணக்கில் அரியலூர் அணி வெற்றி பெற்றது.
சென்னை – கன்னியாகுமரி: 5-0 என்ற கணக்கில் சென்னை அணி வெற்றி.
திருநெல்வேலி – சேலம்: 4-0 என்ற கணக்கில் திருநெல்வேலி அணி வெற்றி.
திருச்சி – கரூர்: 6-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணி வெற்றி.
மதுரை – திருவாரூர்: 3-0 என்ற கணக்கில் மதுரை அணி வெற்றி.
திருப்பூர் – ஈரோடு: 4-1 என்ற கணக்கில் திருப்பூர் அணி வெற்றி.
செங்கல்பட்டு (4-1), தேனி (5-0), திருவண்ணாமலை (1-0), நாமக்கல் (2-1) மற்றும் கோயம்புத்தூர் (2-0) ஆகிய மாவட்ட அணிகளும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று (திங்கள்கிழமை), காலை மற்றும் மாலை வேளைகளில் கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் லீக் முறையிலான ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களே தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


