அசோக் குமார் (13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001) என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது.
குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் .குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார்.
அதே ஆண்டில் தேவிகாராணி யுடன் நடித்த அச்சுத கன்யா 1936 இல்வெளிவந்து நன்றாக ஓடியது ஜென்மபூமி , 1936 இஸ்சாட் , 1937 சாவித்திரி , 1937 வசான் ,1938 நிர்மலா 1938 என்று தொடர் வெற்றியை தேவிகாராணி யின் நிழலில் அனுபவித்தார் .
பின்னர் லீலா சிட்னிஸ் படங்களில் கங்கன் , 1939 பாந்தன் , 1940 ஆசாத் , 1940 ஜுலா , 1941 என்று தொடர் வெற்றி கண்டு இந்தி படத்தில் ஒரு நிலையான அந்தஸ்தை 5 வருடங்களில் பெற்றுவிட்டார்.
1943இல் வெளிவந்த கிஸ் மத் மாபெரும் வெற்றி அடைந்தது . எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் மொய்த்தது . சில சமயங்களில் ரசிகர் பி பாட்டாளத்தை தடியடி நடத்தி கலைத்த வரலாறும் உண்டு இவ்வாறு சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் 2001ஆம் ஆண்டு திசம்பர் 10-ல் 90 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்போது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார்.


