ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு: டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார். இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார். இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணம் அருகிலுள்ள்ள மாயவரம் போகும் வழியிலுள்ள அம்மங்குடி. இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.


