செக்காரக்குடியில் பயிர்காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் உழவர் நலத்துறையின் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2022&23 ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். இந்த விழிப்புணர்வு முகாமில் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் கூறும்போது,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் உத்தரவின்படி கருங்குளம் வட்டாரத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மற்றும் குறுவட்டங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள். ராவி பருவம் 2022&23 காப்பீடு கட்டண செலுத்துவதற்கான காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்து, பாசிப்பயிறு பயிர்களுக்கு 15.11.2022, மக்காசோளம், பருத்திப் பயிர்களுக்கு 30.11.2022, சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு 15.12.2022, கம்பு, சூரியகாந்தி, எள் பயிர்களுக்கு 3.12.2022, நெல் பயிருக்கு 31.1.2023 கடைசி தேதி ஆகும்.
பயிர்களுக்கான காப்பீடு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு உளுந்து, பாசிப்பயிறு பயிர்களுக்கு ரூபாய் 209ம், மக்காச்சோளம் பயிருக்கு ரூபாய் 219ம், சோளம் பயிருக்கு ரூபாய் 115ம், கம்பு பயிருக்கு ரூபாய் 109ம், நிலக்கடலை ரூபாய் 265ம், எள் ரூபாய் 113ம், சூரியகாந்திக்கு ரூபாய் 150ம், பருத்திக்கு ரூபாய் 595ம், நெல்லுக்கு ரூபாய் 467ம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கருங்குளம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார்.
தொடர்ந்து இந்த முகாமில் துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன் கலந்து கொண்டார்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தின் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் சலோமியா சௌந்தர்யா செய்திருந்தனர்.


