
செய்துங்கநல்லூரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உழவர் தின விழா நடந்தது.
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உழவர் தின விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜெயசெல்வின் இன்பராஜ் பயிற்சியினை துவக்கி வைத்து அட்மா திட்டம் அதன் செயல்பாடுகள், சொட்டு நீர் பாசனம் மற்றும் உழவன் செயலி குறித்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்(மாநில திட்டம்) பழனி வேலாயுதம் பயிற்சிக்கு தலைமை வகித்து மாநில திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் விவசாயிகள் தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வேளாண்மை சார்ந்த துறைகளின் அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பயிற்சியில் கருங்குளம் வட்டார விவசாய ஆலோசனைக்குழு தலைவர் குமார் கலந்து கொண்டார். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் மகேந்திரன் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்ததார். மேலும் பட்டு வளர்ச்சி துறையின் இளநிலை ஆய்வாளர் டயானா பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி கன்று வளர்ப்பு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்ததார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் உலகநாதன் அவர்கள் விதை சேமிப்பு கிடங்கு தொழில்நுட்பம் மற்றும் கூட்டுப்பண்ணையத்திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததார். வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையம் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முருகன் நெல், பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயறு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களில் வரும் பூச்சிகள் குறித்தும் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் உழவியல் முறை, இயற்பியல் முறை, இயந்திரம் மூலம் பூச்சிக்கட்டுப்பாடு குறித்தும் பயிற்சி அளித்தார். மேலும் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் அவர்கள் கருங்குளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விவசாயிகள் 100 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயிகள் அனைவரும் விவசாய வாசகம் எழுதிய பதாகைகள் தாங்கி பேரணி நடைபெற்றது. முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன் நன்றியுரை கூறினார்.
ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் செல்வசுந்தரம், ரகுநாத், நூர்தீன், வெங்கடேஷ், திருவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.