நான் பிறந்த ஊரான முத்தாலங்குறிச்சிக்கு சென்றேன். தாமிரபரணி ஓடி வரும் கொள்ளை அழகு. அருமையான கோயில்கள். மிகப்பெரிய ஆலமரங்கள், ஓங்கி வளர்ந்த புளியமரங்கள், ஆற்றுக்குள் மூங்கில்கள், கரையில் மணல்மேடுகள் என இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் பொன்னான ஊர். இந்த ஊரில் தான் இந்த இயற்கையோடு இயற்கையாக நதிக்கரை என்ற பெயரில் எனது மருமகன் மணிகண்டன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறான். நான் சென்ற அன்று எனது தோட்டத்தில் இயற்கைக்கு நடுவில் அவனது சமையல் நடந்தது. இன்று அவன் தயாரித்த உணவை உண்டு பார்த்து கருத்துச் சொல்லும் சிறப்பு விருந்தினர் நான்தான். அருமையான வாய்ப்பு. இனிப்பு முட்டை பொரியல் . நான் இதுவரை கேள்விப் படாத, அதே வேளையில் இதுபோன்ற ஒரு ருசியைக் கண்டு கொள்ளவில்லை. மருமகன் மணிகண்டனைப் பாராட்டினேன். இது போல் பல உணவுகளைப் படைத்து , பதிவு செய்துள்ளார். மருமகனுக்கு ஆதரவு தாருங்கள். அவனது யூடியூப் சேனலை சஸ்கிரைப் செய்யுங்கள், பெல் பட்டனை அழுத்துங்கள். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியை பாருங்கள். அன்புடன்- எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


