முத்தாலங்குறிச்சி த.வெ.க கிளை செயலாளர் சீனிவாசன் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா வருகைபுரிந்தார் அவரை வரவேற்று எழுத்தாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு கொடுத்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
தாமிரபரணி ஆற்றை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற நீதிமன்றத்தில் நான்தொடுத்த வழக்கு உள்ளது. நதியை சீரமைக்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தில் பணம் ஓதுக்கீடுசெய்ய தயாராக உள்ளது. அதற்கு தமிழக அரசு மூலம் வரைவுதிட்டம் தயார் செய்து தரவேண்டும்.
முத்தாலங்குறிச்சியில் உள்ள பழமையான சிவன் கோயிலை புணரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கிய லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு விரைவில் பணி துவங்க வேண்டும் முத்தாலங்குறிச்சி ஊருக்குள் வரும் சாலை ஓரத்தில் உள்ள உயிர் பலி வாங்க துடிக்கும் கிணற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வழங்கிறார். அமைச்சர் ஆவண செய்வதாக வாக்களித்தார்.


