செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்லவேண்டும் என கடந்த 25.11.2022 முதல் பயணிகள் போராடி வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், டி.ஆர்.எம். சந்தித்து மனுகொடுத்தல் என கடந்த 4 ஆண்டு காலாமாக போராடி வருகிறார்கள். வருகிற ஜீன் 15 திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படுகிறது.
இதற்காக செய்துங்கநல்லூர்ரயில் நிலையம் விரிவாக்க பணிமுடிவடையும் நிலையில் உள்ளது. எனவே இந்த நாளில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல டி.ஆர். எம். நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். &முத்தாலங்குறிச்சி காமராசு


