முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமுக்கு பாபு ஜெயசிங் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் ராபர்ட் முன்னிலை வகித்தார். கே.டி.சி நகர் சேகர குழு அமோ செல்வராஜ் சிறப்பு ஜெபம் செய்து முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை, கே.சி.சி பி காலனி சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம் சபை மக்கள் இணைந்து நடத்தினர். இந்த அனைத்து நோயாளிகளையும் சோதித்து அவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. சுமார் 100க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சாந்தினி, மனோகர், சரவணமுத்து, டேனியல், செல்வம், பீட்டர், ஆசிரியர் சோபனா, மருத்துவ செவியர் செலினா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


