தூத்துக்குடியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை (நீர்வளம்) அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


