ராஜகோகிலா அறககட்டளையின் தென்குமி தமிழ்ச் சங்கத்தின் மாதந்திர கூட்டம் கோட்டார் ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் வைத்து இன்று மாலை 5 .30 மணிக்கு நடைபெறுகிறது. தென்குமரி தமிழ்ச் சங்கம் துணை தலைவர் அனுசியா செல்வி வரவேற்று பேசுகிறார். தென்குமரி தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம் தலைவர் அகஸ்டீனா கோகிலவாணி சதாசிவன் முன்னிலை வகிக்கிறார். தென்குமரி தமிழச்சங்கம் செயலாளர் இரா .கோபாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றுகிறார். அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணியபிள்ளை, பயோனியர்குமாரசாமி கல்லூரி உதவிபேராசிரியர் முனைவர் கோபாலப்பதாஸ் வாழ்த்துரை வழங்குகிறார்கள். பொருநை நகாரீகத்தின் பெருமை என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். செந்தமிழ் அருள் நெறிபேரவை தலைவர் புலவர் இராசாமி நன்றியுரையாற்றுகிறார்.


