செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. இதையட்டி அதிகாலைகோயில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் பால் குடம் எடுத்து வரப்பட்டது. செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் திருவரங்கசெல்வியம்மன் கோயிலை வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் ,அலங்காரம் பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சேனை தலைவர் சமுதாயம் செய்திருந்தது.