
சாத்தான்குளம் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 49பேர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 13 வார்டு ஆதிதிராவிடர் பெண் பிரிவுக்கும், 5வது வார்டு ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கும், மீதமுள்ள 6வார்டுகள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பேருராட்சி தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திமுகவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜ தனித்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 57பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் 8பேர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதனால் 49பேர்கள் போட்டியில் உள்ளனர். அதன் விபரம் வருமாறு 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக எஸ்தர் ரஞ்சிதம், சுந்தர், பாஜ சார்பில் ராம்மோகன், 2வது வார்டில் காங்கிரஸ் சார்பில் முத்துகௌரி, சுயேட்சை வேட்பாளராக சந்திராபிரியதர்சினி ராஜகுமாரி, ஞானஜோதி கிறிஸ்துமஸ், பாஜ சார்பில் சிவகாமி, 3வது வார்டில் காங்கிரஸ் சார்பில் ஜோசப் அலெக்ஸ் சுயேட்சையாக வீரக்குமார், ஜான்வர்க்கீஸ், 4வது வார்டில் திமுக சார்பில் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப், பாஜ சார்பில் ஜோசப் ஜெபராஜ், சுயேட்சையாக ஐயப்பன்,
5வது வார்டில் திமுக சார்பில் ஜான்சிராணி, அதிமுக சார்பில் செல்வ மகாராஜா, பாஜ சார்பில் பொன்மணி, சுயேட்சையாக முத்தழகன், 6வது வார்டில் திமுக சார்பில் ஸ்டேன்லி, பாஜ சார்பில் தினகரன், சுயேட்சையாக செல்லத்துரை, 7வது வார்டில் திமுக சார்பில் வசந்தா, அதிமுக சார்பில் லிசா, பாஜ சார்பில் செல்வகுமாரி, 6வது வார்டில் திமுக சார்பில் மாரியம்மாள், பாஜ சார்பில் முத்துலட்சுமி, சுயேட்சையாக மகேஸ்வரி, 9வது வார்டில் திமுக சார்பில் இந்திரா, பாஜ சார்பில் செல்வலட்சுமி, சுயேட்சையாக தங்கம், ஆகியோரும்,
10வது வார்டில் திமுக சார்பில் ரெஜினி ஸ்டெல்லாபாய், சுயேட்சையாக பாத்திமா பர்வீன், 11வது வார்டில் திமுக சார்பில் முருகன், பாஜ சார்பில் சுப்பிரமணியன், சுயேட்சையாக ஈஸ்வரன்,மகாராஜன், 12வது வார்டில் திமுக சார்பில் தேவநேசம், சுயேட்சையாக தங்கத்தாய், 13வது வார்டில் திமுக சார்பில் மகேஸ்வரி, பாஜ சார்பில் முத்துக்கனி, 14வது வார்டில் திமுக சார்பில் கற்பகவள்ளி, அதிமுக சார்பில் இந்திரா, பாஜ சார்பில் பரமேஸ்வரி, சுயேட்சையாக மின்னல் கொடி,
15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் வக்கீல் வேணுகோபால், பாஜ சார்பில் எட்வர்ட் ராஜதுரை, சுயேட்சையாக அந்தோணி ஆல்வீன், மரியஞானம், ரெத்தின முருகேசன், லிங்கப்பாண்டி ஆகிய 49பேர்கள் போட்டியிடுகின்றனர். தலைவர், துணைத் தலைவர் பதவி வார்டு உறுப்பினர்களே தேர்வு செய்யும் நிலை உள்ளதால் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடுபவர்களிடையே விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.