சாத்தான்குளத்தில் முகுறு காலநிலை சரிபார்க்கும் திட்டத்தின் மூலம் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் நீர்பிடிப்பு திட்டத்தினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் முகுறு காலநிலை சரிபார்க்கும் திட்டத்தின் மூலம் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் நீர்பிடிப்பு திட்டத்தினை (லட்சுமிபுரம், கருங்கடல், நெடுமாங்குளம் ஆகிய 3 பகுதிகளுக்கு) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று துவக்கி வைத்து 18 பயனாளிகளுக்கு ரூ.3.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தேசிய நபார்டு வங்கியானது நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்களில் வேளாண்மை உற்பத்தியை பெருக்க செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மழை நீரை சேமித்தல், மண் அரிப்பை தடுத்தல், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாதிரி திடல் விளக்கம் மூலம் வேளாண் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் மகளிர் சுய உதவி குழு மேம்பாடு ஆகியவை அடங்கும். இவ்வாறு வேளாண்மை உற்பத்தியை நபார்டு வங்கி நீர்வடிப்பகுதி மேம்பட்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்புடைய வேளாண்மையை முன்னெடுப்பது என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருப்பது அனைவரும் அறிந்ததே. இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் உள்ள நீர்வடி பகுதி திட்ட பகுதியில் மண் வளத்தை பாதுகாக்கவும் மற்றும் பருவ நிலைக்கு ஏற்புடைய ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தை செயல்படுத்திடவும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த முகறு எனும் புனரமைக்கும் கடன் நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து இந்தியாவில் பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 48 நீர்வடி பகுதி திட்ட பகுதியில் செயல்படுத்த முன்வந்தது.
நபார்டு வங்கியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்டோபர் 2020இல் கையெழுத்தனாது. இதற்காக 4.5 மில்லியன் யூரோ பணத்தை ஜெர்மன் நாட்டை சேர்ந்த புனரமைக்கும் கடன் நிறுவனமும் மற்றும் 0.89 மில்லியன் யூரோ பணத்தை நபார்டு வங்கியும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது நிலவும் மோசமான பருவநிலையினால் ஏற்படும் சவால்களை விவசாயிகள் எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வேளாண் உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது என்ற பல்வேறு வேளாண் யுக்திகளை அந்தந்த நீர்வடி பகுதியில் உள்ள கிராம வேளாண் பெருமக்களுக்க பல்வேறு மாதிரி செயல்விளக்க திடல் மூலம் கற்றுத்தரப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே நபார்டு வங்கியினால் செயல்படுத்தப்பட்டு மற்றும் முடிவடைந்த நிலையில் உள்ள நீர்வடி பகுதி மேம்பாட்டு திட்ட பகுதியில் உள்ள 25 இடங்களில் இத்திட்டத்ததை செயல்படுத்த நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பதிமூன்று திட்ட செயலிழக்க முகமையும் கண்டறிந்து பின்பு திட்ட வழிகாட்டு அளவுகோல் மூலம் இத்திட்டத்திற்கு ஏற்புடைய வேளாண்மை யுக்திகளை விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வெவ்வேறு திட்ட செயலிழக்க முகமையை நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் அதற்கான அனுதியையும் கடந்த ஆண்டே வழங்கியுள்ளது.
இதை தயார் செய்ய ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூ.1.48 லட்சம் நிதியை வழங்கியுள்ளது. பின்பு இந்த செயல்விளக்க முகமையானது அந்தந்த நீர்வடி பகுதியில் கிராம நீர்வடி குழுவை திட்ட வழிகாட்டு அளவுகோல் மூலம் தேர்ந்தெடுத்தது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களே செயல்விளக்க முகமையுடன் சேர்ந்து இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் அனைத்து தொழில்நுட்பங்களும் அந்தந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் நிலவிய காலநிலை காரணிகளை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்காக அங்கு முப்பது ஆண்டுகளில் நிலவிய காலநிலை காரணிகளான மழையளவு மற்றும் வெப்பநிலையை கொண்டு நிபுணர்களை கொண்டும் மற்றும் கிராம நீர்வடி குழுவை உறுப்பினர்களை கொண்டும் ஆய்வு மற்றும் ஆலோசனை செய்து தனித்தனியாக உருவாக்கப்பட்டது. இவ்வாறாக எந்த தொழில் நுட்பங்களை எந்தந்த சர்வே நெம்பரில் செயல்படுத்துவது என்று கண்டறியப்பட்டது. இதற்காக விவசாயிகளின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவ்வாறாக விரிவான திட்ட அறிக்கையானது தயார் செய்யப்பட்டு நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்த பிறகு இந்த 25 திட்டங்களை செயல்படுத்த 29 ஜூலை 2021 மற்றும் 11 ஆகஸ்ட் 2021 அன்று நடைபெற்ற நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக திட்ட குழு கூட்டத்தில் இதற்கான அனுமதியை வழங்கியது. இதன்மூலம் இந்த குறிப்பிட்ட 25 திட்ட பகுதியில் செயல்படுத்த முதல் தவணையாக தமிழ்நாட்டுக்கு ரூபாய் 3.61 கோடியை நபார்டு வங்கி வழங்கியுள்ளது. இந்த திட்டமானது 2021ஆம் நிதி ஆண்டில் தொடங்கி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சிக்ன பாசன நீர் மேலாண்மை முறைகள், மண் வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், பருவநிலைக்கு ஏற்புடைய வேளாண்மை யுக்திகள், பருவநிலைக்கு ஏற்புடைய பயிர்களை வளர்க்க தேவையான விதைகள் வழங்குவது மற்றும் காலநிலை இடர் மேலாண்மை போன்றவை அந்தந்த விவசாய நிலங்களில்திட்ட செயலிழக்க முகமையை கொண்டு மாதிரி திடல் மற்றும் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்படும். மேலும் வேளாண் ஆலோசனை முன்னறிவிப்பும் வாராவாரம் இரண்டு முறை குறும்செய்தியாக கைபேசி வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்த நான்கு ஆண்டுகளுக்கும் திட்டத்தில் நடைபெறும் யெல்பாடுகளை நபார்டு வங்கியே கண்காணிக்கும். இந்த திட்டமானது மாறிவரும் பருவநிலைக்கு ஏற்புடைய விவசாய யுக்திகளை வேளாண் பெருமக்களுக்கு செய்து காண்பித்து நீடித்த நிலையான விவசாய உற்பத்தியை பெருக்குவதே முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.7500 தையல் இயந்திரம் வாங்குவதற்கான காசோலையினையும், 10 பயனாளிகளுக்கு ஆடு வாங்குவதற்கு தலா ரூ.11500க்கான காசோலையினையும், ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைப்பதற்கு 4 பயனாளிகளுக்கு தலா ரூ.54000க்கான காசோலையினையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ்ராமலிங்கம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீரா, செட்கோ இயக்குனர் ஜார்ஜ், றுநுநுனுளு ஐயப்பன், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


