பழந்தமிழரின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலையின் சிறப்புக்களை கல்லூரி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக சிறப்பு மரபு நடை நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இன்று நடைபெற்றது. இந்த மரபு நடையில் கிருஷ்ணாபுரம் கோயிலின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைகளை பற்றி தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்று துறை மாணவ மாணவிகளுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் பாளையங்கோட்டையில் கிழக்கு வாசலான நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுற்றி பார்த்தனர். அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களை பற்றியும் அப்பொருள்களை பாதுகாக்கும் முறை பற்றியும் மாவட்ட காப்பாட்சியர்
சிவ. சத்தியவள்ளி விரிவாக விவரித்தார். தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் ஜெ.ஜோன் டி அல்மெய்டா,
வினோ லோபோ ஆகியோர் உடன் இருந்தனர்.