கொங்கராயகுறிச்சிக்கு நெல்லையில் இருந்து அரசுபேருந்து ஒன்று 21 மாதங்கள் முன்பு வரை இயங்கி கொண்டிருந்தது. இந்த பேருந்தை கொரோனா காரணம் காட்டி நிறுத்தி விட்டார்கள். இதனால் ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி உள்பட வழியோர கிராம மக்கள் மிகவும் பாதிககப்பட்டனர். இதுகுறித்து ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் முறைப்படி அரசுபோக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு மனுசெய்தார். பள்ளி திறந்தவுடன் இந்த பேருந்தை இயக்குவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையில் பாளையங்கோட்டை சட்ட பேரவை உறுப்பினர் ,அப்துல் வாகாப் அவர்களை சந்தித்து இந்த பேருந்து குறித்து மனு செய்ய ஆறாம்பண்ணை முகைதீன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும் ஆறாம்பண்ணை திமுக செயலாளருமான இமாம் அலி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர், ஒன்றிய குழு உறுப்பினர் மைமூன் அப்துல் கரீம், ஜமாத் உறுப்பினர்கள் இப்ராகீம் , முகம்மது இக்பால் , நிஜாம் உசைன் சாகுல் அமீது ஆகியோர் சென்று இருந்தனர்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ இது குறித்து உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 21 மாதங்களுக்கு பிறகு இன்று கொங்கராயகுறிச்சிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் மகிழச்சியுடன் ஏறினர். அனைவருக்கும் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் மற்றும் இமாம் அலி உள்பட ஜமாத்தை சேர்ந்தவர் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் சேக்அப்துல் காதர், ஒன்றிய குழு உறுப்பினர் ஜனாப் மைமூன் அப்துல் கரீம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அப்துல் கனி, வார்டு உறுப்பினர்கள் இப்ராஹீம், செய்யது அலி பாத்திமா மக்கள் நலச் சங்கம் தலைவர் சயீத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
————————–


