
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றியவர் டாக்டர் ஆயிஷா சித்திகா. இவர் கொரோனா காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றினார். அதன்பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பணி மாறுதலாகி சென்றார்.
அவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலராக ஆயிஷா சித்திகா பணியாற்றி வருகிறார்.
அவருக்கு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆயிஷா சித்திகாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.