தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா ஹோட்டல் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாநகராட்சி மேயர் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, வட்ட கழக செயலாளர்கள் ராஜாமணி, சுரேஷ், முன்னாள் வட்ட செயலாளர்களும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்களுமான இசக்கி முத்து, பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொ.மு.சா பேச்சிமுத்து, வட்ட கழக பிரதிநிதி அருணகிரி, முன்னாள் மாநகர விவசாயின் துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து காெண்டனர்.


