திருச்செந்தூரில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. அலைகள் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது.
திருச்செந்தூரில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. நேற்று முன்தினம் அமாவாசை தினம் என்பதால், திருச்செந்தூரில் நேற்று காலையில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் வாங்கியது. இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தென்பட்டன. கடல் உள்வாங்கியபோதும், அலைகள் சற்று சீற்றத்துடனே காணப்பட்டது. எனினும் வழக்கம்போல் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் மாலையில் கடல் இயல்புநிலைக்கு திரும்பியது.


