தூத்துக்குடியில் தலா ரூ.15.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று எஸ்.இ.பி.சி.பவர் (பி) லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின்மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம், விவேகானந்தர் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.15.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், தலைமையில் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தருவை விளையாட்டு மைதானத்தில் ரூ.49.85 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள TURF கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து கிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜா, தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணிஸ்டாலின், முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி நரேந்திரா மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


