தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பியுள்ள 14 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உதவி ஆட்சியர்களாகப் புதிய பணியிடங்களை வழங்கி அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டப் பயிற்சி ஆட்சியர் விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டப் பயிற்சி ஆட்சியர் டி. புவனேஷ்ராம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


