தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மாதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் திறன் பயிற்சி அளிக்கபடுகிறது. பொறியியல் துறையில் ஆய்வகங்கள் மூலம் மாணவர்கள் கற்று கொள்ளும் விதத்தில் கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து 3டி பயிற்சி, எல்.இ.டி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமைதாங்கியதோடு, திறன் பயிற்சி, பொறியியல் துறையின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஜான் கென்னடி இயக்குனர் மாணவர் சேர்க்கை பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றி, பரிசளித்து உற்சாகப்படுத்தி பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி பேசினார்.
திறன் பயிற்சிகள் குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பயிற்சி மூலம் பொறியியல் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நாங்களும் பொறியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. என்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன், பேராசிரியை சுமதி பேராசிரியர் தாமஸ், திறன் பயிற்சி துறை இயக்குநர், பேராசிரியர்கள், நிர்வாக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


