தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1417 மையங்களில் வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 29வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் 1417 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 150 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 1267 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இம்மையங்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம்.
மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய்த் துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, தன்னார்வலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும்; தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கரோனா தடுப்பூசி செலுத்தி உயிரிழப்பைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


