ஆதிச்சநல்லூரில் விரைவில் மத்திய அரசு சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையட்டி பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணம் ஒதுக்கீடு செய்தார். கடந்த 6 மாதம் முன்பு இதற்கான பணி துவங்கியது. ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து உள்ளது உள்ளபடியே வைத்து கண்ணாடி பேழையில் காட்சி படுத்துவது. ஒவ்வொரு இடத்திற்கும் பேட்டரி கார் மூலமாக பார்வையாளர்களை கூட்டிசெல்வது. வெளிநாடு மற்றும் வெளிஇடங்களில் உள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களை ஆதிச்சநல்லூர் பரம்பு அருகே காட்சி படுத்துவது உள்பட பல பணிகள் நடந்து வருகிறது. இந்த இடங்களை பார்வையிட மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் வருகை தந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் தோண்டப்பட்ட 20க்குமேற்பட்ட குழிகளில் எடுக்கப்பட்ட 60 முதுமக்கள் தாழிகள் மற்றும் அதில் கிடைத்த எலும்பு கூடுகள், வாள் , நெற்மணிகள் கிடைத்த முதுமக்கள் தாழி, பாண்டியர் காலத்து நாணயங்கள் உள்பட பல பொருள்களை பார்வையிட்டார். தொல்லியல் அதிகாரி யத்தீஸ்குமார், ஆய்வு மாணவர்கள் குமரேசன், அருண் ஆகியோர் அவருக்கு விளக்கம் அழித்தனர்.
அதை கவனமாக கேட்டறிந்தவர். அலெக்ஸாண்டர் இரியா 1902ல் ஆய்வு செய்த இடத்தின் அருகே தற்போது நடைபெறும் ஆய்வு குறித்தும் பார்வையிட்டார். அதன் பின் புதிதாக அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினையும் ஆய்வு செய்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், கிராம நிர்வாக அதிகாரி பாண்டிபெருமாள் உள்பட பலர் உடன் வந்தனர்.
&&&&


