தூத்துக்குடியை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் இசைப்பள்ளி ஆசிரியர். தூத்துக்குடி மாவட்டம் 25 வருடத்தில் “எங்கள் ஊரிது” என்ற பாடலை அனுராதாஸ்ரீராம் மூலமாக பாடவைத்து பிரபலமானவர். நெல்லை புத்தககண்காட்சியில் நெல்லை புகழ் பாடும் இவர் பாடல் ஒலித்தது. தாமிரபரணி மகாபுஷ்கரத்தில் இவர் எழுதிய இசையமைத்த ஆரத்தி பாடலும் புகழ் பெற்றது. இந்த நிலையில் இவர் வரகவி வீரபாண்டிய புலவர் என்னும் சங்கரமூர்த்திப் புலவர் இயற்றிய ஸ்ரீபாகம்பிரியாள் பிள்ளைத்தமிழை பாடலாகவும், புத்தக வடிவில் எளிமையாக எழுதியும் வெளியிட்டார். இதன் வெளியிட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 17 ந்தேதி தூத்துக்குடியில் நடந்தது.
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் இவர்தனது நூல் வெளியிட்டு விழாவிற்கு வந்த அனைத்து பிரமுகர்களுக்கும் அவர்களது நிகழ்வுகள் குறித்த புகைப்படத்தினை மெகா சைஸ்ஸில் லேமினேஷன் செய்து, அதை அவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசளித்து வருகிறார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு செய்துங்கநல்லூரில் உள்ள அவரது ஸ்டுடியோவில் வைத்து இந்த பரிசை அளித்தார்.
விழா முடிந்தவுடன் விருந்தினர்களை மறந்து விடும் இந்த காலத்தில் அவர்களை நினைவு வைத்து சுமார் 2 மாதம் கழித்து வீடு தேடி ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பாராட்டி புகைபடத்தினை பரிசளித்த இசைப்பாளர் இசக்கியப்பன் பாராட்டுக்குரியவர்.


