இன்று முதல் நெல்லையிலிருந்து வெளிவரும் நெல்லை டைம்ஸ் நாளிதழில் ஞாயிற்றுக் கிழமை தோறும் நான் எழுதும் தொடர் வெளிவந்து விட்டது. தாமிரபரணியை நம்பியே கடந்த 36 வருடங்களாக எழுதி வரும் எனக்கு “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்” என்ற தலைப்பில் எழுத வாய்ப்பு தந்த பத்திரிக்கை நிறுவனர் அய்யா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கும், ஆசிரியர் மணி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும், தொடர்ந்து என் எழுத்தை ரசித்து விமர்சித்து வரும் ரசிகர்களான உங்களுக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து படியுங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். நன்றி நண்பர்களே – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு