என்னுடைய தலைத்தாமிரபரணி நூலின் விமர்சனம் இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளி வந்துள்ளது. விமர்சனம் வெளியிட்ட தினத்தந்தி நிர்வாகத்துக்கு நன்றி. தொடர்ந்து இந்த நூலை வாங்கி படித்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே & அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தினத்தந்தியில் வெளியான விமர்சனம் வருமாறு
தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி கடலில் கலக்கும் தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த நூலில் பொதிந்து கிடக்கின்றன.தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள் , நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை ஆகியவற்றையும் கொண்டு இருப்பதால், இந்த தகவல்கள் அனைத்தும் ஆர்வத்துடனும் விறுவிறுப்புடனும் படிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன.
ஆசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு காவ்யா பதிப்பகம் ரூ 1000-/- நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9840480232