ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி சிவகாமி அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இவ்விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பொன்இசக்கி லெட்சுமணன் தலைமை வகித்தார். அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன், இன்ஸ்பெக்டர் நம்பி, கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதன்பின் அங்கு வந்திருந்த பெண்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சரவணன், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், பொறியாளர் சித்திரை சேகர், பொதுப்பணித்துரை செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் நவீன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வரதராஜன், பஞ்சாயத்து துணை தலைவர் கணபதி, கிராம உதயம் தொண்டு நிறுவன ஆழ்வார் தோப்பு மேலாளர் வேல்முருகன், பகுதி அலுவலர் இராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


