ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆறாம்பண்ணை தாமிரபரணிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் மரக்கன்றுகளை நட்டார். அதன்பின் அங்கு வந்திருந்த பெண்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் தொண்டு நிறுவன ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், பகுதி அலுவலர் இராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


