தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் முள்செடிகளை அகற்றி மரக்கன்றுகளை நடுவதற்கு இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில்ராஜ் வருகை தந்தார்.
அவர் ஆழிகுடியில் தாமிரபரணி ஆற்றின் மாரடிச்சான் சுடலை கோயில் அருகில் உள்ள முற்செடிகள் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் முருகேஸ்வரி தினேஷ் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் தாமிரபரணி கரைப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சரவணன், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், பொறியாளர் சித்திரை சேகர், பொதுப்பணித்துரை செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் நவீன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ்சாயத்து துணை தலைவர்கள் ஆழிகுடி ஜான் ஜார்ஜ், கலியாவூர் பரமசிவன், பசுமை தமிழ் தலைமுறை சுதன், ஆறுமுகம், பூல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


