தாமிரபரணி ஆற்றின் கரையோரம் முள்செடிகளை அகற்றி
மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி மற்றும் ஆறாம்பண்ணை ஆகிய மூன்று கிராமங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் முள்செடிகளை அகற்றி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் நட்டார். முன்னதாக ஆழிகுடியில் முள்செடிகளை அகற்றும் ஜே.சி.பி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில்ராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அதன் பின் அங்கு மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து கிராமஉதயம் தொண்டு நிறுவனம் மூலமாக மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார். ஆறாம்பண்ணை தாமிரபரணி கரையில் மரங்களை நடந்த ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் பேசியதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை என்பது மிக குறைவான அளவிலேயே உள்ளது. 5 சதவீதம் மட்டும் தான் பசுமை உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமையை பெருக்க அனைவரும் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். மரங்களை நட்டு நாம் பராமரித்து வந்தால் நமக்கு மரங்கள் நிழலை கொடுக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயரும், சுற்றுபுறச்சூழல் பாதுகாக்கப்படும். தற்போது நாம் தாமிரபரணியில் மூன்று இடங்களை மரம் நட்டு இந்த நிகழ்ச்சியை துவக்கியுள்ளோம். வருங்காலத்தில் அனைத்து தாமிரபரணி கரை பஞ்சாயத்து மூலமாக தாமிரபரணி கரை முழுவதும் மரம் நடும் பணி நடைபெறும்.அதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உதவியாக இருக்கவேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சரவணன், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், பொறியாளர் சித்திரை சேகர், பொதுப்பணித்துரை செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் நவீன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன்,அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன்,இன்ஸ்பெக்டர் நம்பி, பஞ்சாயத்து தலைவர்கள் ஆழிகுடி முருகேஸ்வரி தினேஷ், முத்தாலங்குறிச்சி பொன்இசக்கி லெட்சுமணன், ஆறாம்பண்ணை சேக்அப்துல்காதர், பஞ்சாயத்து துணை தலைவர்கள் முத்தாலங்குறிச்சி கணபதி, ஆழிகுடி ஜான் ஜார்ஜ், கலியாவூர் பரமசிவன், பசுமை தமிழ் தலைமுறை சுதன், ஆறுமுகம் ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வரதராஜன், கிராம உதயம் தொண்டு நிறுவன ஆழ்வார் தோப்பு மேலாளர் வேல்முருகன், பகுதி அலுவலர் இராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


