தூத்துக்குடியில் வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மேயர், துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சியின் முதல் கூட்டம் வருகிற 8ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 4 மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வஉசி சந்தையில் கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம், போல்டன் புரத்தில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.


