தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல், உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம் விவசாயத்தில் இழப்பு வராமல் இருப்பதறக்கு வழிவகை செய்து வருகிறது. விவசாயிகள் விளைவித்த பொருட்களை சரியான விலைக்கு விற்பனை செய்வது, விளைவித்த வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள், சந்தைப்படுத்தலில் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்தும் வாய்ய்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யூடியூப் வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திரு. G. வெங்கடேஷ் அவரகள் அவர்கள் விளக்கம் அளித்து விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியை 1400 க்கு மேற்பட்ட விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்து உள்ளனர்.


