
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தும் தாமிரப ரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத அதி காரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடராதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தாமிரபரணியில் கழிவுநீர்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை ஐகோர்ட் டில் 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமை யான படித்துறைகள், மண்ட பங்கள் சிதிலமடைந்து வரு கின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராம ரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தர விட வேண்டும்” என கூறியி ருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தாமிரப ரணி ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்கவில்லை என் றால் சம்பந்தப்பட்ட துறைக ளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்த னர். இதுகுறித்து மாசுக்கட் டுப்பாட்டு வாரிய தலைவர் பதில் அளிக்கவும் உத்தரவி டப்பட்டது.
அவமதிப்பு வழக்கு
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புக ழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது விக்கிரமசிங்கபு ரம் உள்ளிட்ட 5 உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக் கல் செய்யப்பட்டது. இவற் றில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது இதனை தடுக்க சுத்திகரிப்பு நிலையங் கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற் கான நிதி மற்றும் எந்திரங் களை பெறுவதில் தீவிர நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என கூறப்பட்டு இருந் தது.
இதற்கிடையே, தாமிரப ரணி ஆற்றில் கழிவுநீர் கலப் பதை தடுக்கும்படி பல மாதங்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்த ரவை செயல்படுத்தாத அதி காரிகள் மீது அவமதிப்பு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு பலகோடி ரூபாய் அபராதம் அல்லது நஷ்டஈடு விதிக்க வேண்டும் என்றும் கோரி மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி நேற்று மனு தாக்கல் செய்தார்.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும், தாமிரபரணியில் கழிவுநீரை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்துக்கு பரிந் துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட் டது.
பின்னர் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய தலைவர் சார் பில் ஆஜரான வக்கீல், தாமி ரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பே ரில் உள்ளாட்சி நிர்வாகங்க ளுக்கு நாங்கள் கடிதம் அனுப்பி அறிவுறுத்தி கண்கா ணித்து வருகிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்போது உத்த ரவு பிறப்பித்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு வக்கீல், சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது என்றார்.
கிரிமினல் நடவடிக்கை
இதை கேட்ட நீதிபதிகள், அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் மட் டுமே அனுப்பப்பட்டு உள் ளதா? அதன் பேரில் நடவ டிக்கை எடுக்காத அதிகாரி கள், கழிவுநீர் கலப்பதற்கு காரணமானவர்கள் மீது கிரி மினல் வழக்கு தொடர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், தாமி
ரபரணியில் எங்கெங்கு கழிவு நீர் கலக்கிறது என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கை கள் குறித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்