தூத்துக்குடியில் ஆயுதப்படை காவல் துறையினரின் பேரிடர் மீட்பு பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் பேரிடர் மீட்பு பயிற்சி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
இந்த பேரிடர் மீட்பு பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரும் தன்னார்வலர் மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சியாளருமான மரிய மைக்கேல் என்பவர் மேற்படி ஆயுதப்படை காவல்துறையினருக்கு மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பை நடத்தினார்.
மேற்படி நிகழ்வுகளின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், சார்பு ஆய்வாளர்கள் வெங்கடேசன், கௌசல்யா உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


