செய்துங்கநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளைய விதைகள் சிறப்பு வகுப்பு தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாணவர்களுக்கு கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மாணவர்களின் திறமையை முன்னேற்றம் அடைவதற்கு நாளைய விதைகள் என்ற தொடர் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
இந்த வகுப்புகள் தொடர்ந்து 4 வார காலம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா ஜமாத் அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுலைமான் தலைமை வகித்தார். துணை செயலாளர் இம்ரான் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அப்துல் ரஹ்மான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சாதிக், அப்துல்கனி, வாசீம், அப்துல் காதர், நௌபல், அப்துல் கபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.


