பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் பனை செல்வம் மஹாலில் வைத்து நடைபெற்றது
முகாமிற்கு வருகை தந்தவர்களை திருநெல்வேலி கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார். கதர் கிராம ஆணையம் மதுரை கோட்ட உதவி இயக்குனர் அன்புச்செழியன் துவக்க உரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா
திட்ட விளக்க உரையாற்றினார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் ஜெரினா பபி, தூத்துக்குடி பனைவெல்லம் மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி, பனை வெல்லம் கூட்டுறவு சங்கத்தலைவர் ராயப்பன், ஆகியோர் கருத்துரை வழங்கினார்.
முடிவில் திருநெல்வேலி கதர் கிராம தொழில்கள் ஓ எஸ் சரவணராஜா நன்றி கூறினார் முகாமில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்