
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மருதம் ஃபவுண்டேசன் சார்பில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் முன்னால் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரும் தற்போது திருச்செந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருமான கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மருதம் ஃபவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் சந்ரு, செயலாளர் சதீஷ், துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், உறுப்பினர்கள் வள்ளிநாயகம், சுரேஷ், காசினிவேந்தன், செல்வாராஜா ஆகியோர்கள் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.