தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராக பணியாற்றியவர் கோபாலகிருஷ்ணன். இவர் தற்போது பணி மாறுதலாகி திருச்செந்தூர் சமூக நலத்திட்ட வட்டாட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டு மாறுதலாகி செல்கிறார்.
இவருக்கு பாராட்டு விழா நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் புதிய வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு உட்பட்ட வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரி ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னாள் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனை வாழ்த்தி பேசினர்.
ஸ்ரீவைகுண்டம் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு முன்னாள் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து முன்னாள் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணணுக்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


