கிரத்திக்கா தீர் அல்லது கிரத்திக்கா செங்கர் , சூலை 3, 1986) இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கசௌத்தி சிந்தகி கே என்ற இந்தியத் தொலைக்காட்சித் தொடரில் பிரேர்னாவாக (இரண்டு) என்ற கதாபத்திரத்தில் நடித்ததால் பிரபலமானார். இவர் கியுங்கி சாசு பி கபி பகூ தி என்ற தொலைக்காட்சித் தொடரில் சாஞ்சி எனும் கதாபாத்திரமாகச் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். 9எக்சில் ஒளிபரப்பப்பட்ட கியா தில் மே ஏ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நைனா எனும் கதாபாத்திரமாக நடித்துள்ளார். இலக்சு கோன் சீத்தெக பாலிவுடு கா திக்கெட்டு எனும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளார். இவர் ஜான்சி ராணி… ஒரு வீரப்பெண்ணின் கதை எனும் தொடரில் இராணி இலட்சுமிபாயாக முதன்மைப் பாத்திரமேற்று, இராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை நடித்துக் காட்டினார். இப்போது, மறுமணம் என்ற ஜீ தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் ஆர்த்தி எனும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கிரத்திக்கா செங்கர் சூலை 3, 1985இல் கான்பூரில் பிறந்து தில்லியில் பட்டம் பெற்றுக் கொண்டார். நடிகையாக வருவதற்கு முன்பு கிரத்திக்கா விளம்பர நிறுவனமொன்றிலும் அங்கமாத் தொலைக்காட்சியிலும் வேலை செய்தார்.
கசௌத்தி சிந்தகி கேயில் பிரேர்னாவாக (இரண்டு) நடித்ததிலிருந்து கிரத்திக்கா குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.
ஜான்சி ராணி… ஒரு வீரப்பெண்ணின் கதையில் இவர் முதன்மைப் பாத்திரமான இராணி இலட்சுமிபாயாக நடித்தார். இப்பாத்திரம், தொலைக்காட்சித் தொடர்த் துறையில் கிரத்திக்காவுக்குப் பெயர் தேடித் தந்தது. தற்போது மறுமணம் என்ற தொடரில் ஆர்த்தியாக நடித்து வருகிறார். தொடரின் பெயர் குறிப்பிடுவது போல இத்தொடர் மறுமணம் செய்யும் ஒரு கைம்பெண்ணைப் பற்றியது. இத்தொடரில் குர்மீத்து சௌத்ரியும் நடித்து வருகின்றார். பெப்ரவரி 20, 2012இலிருந்து இத்தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.


