நாசரேத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாசரேத் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் புகைப்படத்திற்கு பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமையில் மாலை அணிவித்து திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு கேசரி வழங்கினர். அதனைத் தொடர்ந்து நாசரேத் கேவிகே சாமி சிலை, நாசரேத் சந்தி போன்ற பகுதியில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதே போல் நல்ல சாமாரியன் மனநிலை பாதிக்கப்பட்ட இல்லத்தின் மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் நகர செயலாளர் ரவி செல்வகுமார்.மாவட்ட பிரதிநிதி தாமரைச் செல்வன், பேரூராட்சி துணைத் தலைவர் அருன் சாமுவேல், நகர பொருளாளர் சுடலைமுத்து, துணைச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி அலைக்ஸ்புரூட்டோ, வார்டு செயலாளர் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, ஜெயசிங், பால்ராஜ், கவுன்சிலர் ஸ்டெல்லா, ஜெயா, மணிநகர் சுரேஷ், மாடசாமி, அகப்பைகுளம் ஸ்டிபன் ஞானதுரை, ஞான்ராஜ், துரைராஜ், கண்ணன், முருகன், நகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்திரன், செல்வின் பிரேம்குமார், விசிகட்சியை சேர்ந்த சூசை, சுரேஷ், மதிமுக நிர்வாகி மத்தேயு ஜெபசிங், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


