பொதிகை மலை பயணத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்ட புருஷோத்தமன் மற்றும் அய்யா ஆகியோரின் துணையுடன் அடுத்த கட்டமாக அகத்தியரை தரிசிக்கும் நிகழ்வு இந்த கட்டுரையை சுவாரசியப்படுத்துகிறது.
நகரங்களின் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பான வேக நடையில் இருக்கும்.
ஆனால் பொதிகை மலையில் மேகநடையில் நடக்க வாயப்பு கிடைத்தது ஒரு சிறப்பு.
தென்றல் நடை பயிலும் பொதிகை மலையில் மேகக்கூட்டங்களுக்கிடையே உருவான மேகநடையில் குழுவினருடன் பயணித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும்.
சங்க காலத்தில் வாணிகம் செய்து வந்த சங்கு முத்திரை என்ற இடமும், அகத்தியருக்கு பொங்கல் வைக்கும் இடமும் அறிய முடிந்தது.
தலை தட்டிய மேகத்தை காலுக்கு கீழே 200 அடிக்கு வருமளவிற்கு பயணத்தில் உயரம் தொட்டது சிலிர்க்க வைக்கிறது.
ஒரு வழியாக குறு முனி எனப்படும் அகத்திய மாமுனியின் உருவச்சிலையை கண்டு களித்த நொடி அற்புதம்.
தாமிரபரணியை வற்றாமல் வாரி வழங்க அகத்தியர் தொடர்ந்து அருள் புரிய வேண்டும் என்ற அனைவரின் கோரிக்கையும் கட்டுரையில் எதிரொலித்தது.
தென்றலும், தமிழும் தோன்றிய இடத்தில் நின்று நிலை பெற்றிருக்கிறது இந்த கட்டுரை.
அடுத்ததாக தலைத்தாமிரபரணி தோற்றும் இடத்தை காண பயணக்கட்டுரையில் காத்திருக்கிறோம்.