தூத்துக்குடி போல்பேட்டை கோமதிபாய் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
கொடை விழாவையொட்டி தினமும் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவில் தலைவர் வேல்முருகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ராமர், ஆலோசகர்கள் மாணிக்கம், பட்டுக்கண்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நடராஜன், முருகன், கிருஷ்ணசாமி, மந்திரமூர்த்தி, முருகன் மற்றும் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், பக்தர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


