செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆலயத்தில் புத்தாண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இதையட்டி குண்டு எரிதல், கயிறு இழுத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், உள்பட பல போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புனித லூசியா நடுநிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாயசங்க தலைவர் குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மரிய ஆரோக்கிய காட்வின் வரவேற்றார். பங்கு தந்தை ஜாக்சன் எம். அருள் ஆசியுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா, பாபு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ரமணி பாய், நிகழ்ச்சியை ஆசிரியைகள் விக்டோரியா, லூசியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஊர் பிரமுகர்கள் சார்லஸ் பூபாலராயர், பிச்சை பூபாலராயர், சுரேந்தரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


