தூத்துக்குடியில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காந்தி, காமராஜர் திருவுருவ சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜா ராம், ஐஎன்டியூசி முனியசாமி, வெள்ளப்பட்டி ஏசுதாசன், காமராஜர் சிவாஜி நற்பணி மன்ற தலைவர் எஸ்.ஆறுமுக பெருமாள், சேவியர் மிஷியர் ஆனந்தராஜ், அடல்ப், முருகப் பெருமாள்,ஸ்டீபன், ரூஸ்வெல்ட் எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்


