கருவேலம்பாடு கிராமத்தில் மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இணைந்து ஆனந்தபுரம் அருகில் உள்ள கருவேலம்பாடு கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல் நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கருவேலம்பாடு ஊராட்சி மன்றத் தலைவர் இ.நயினார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ச.ஜனகர் முன்னிலை வகித்தார்.
மேல்நிலை குடி நீர்த்தேக்க தொட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனரும், புது வாழ்வு சங்க நிறுவன மானருமான சகோ.மோகன் சி. லாச ரஸ்ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நன்றி கூறினார்.


