தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 3பேர் ராமேஸ்வரம் அருகே மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மனுவேல் மகன் அண்டோ (50), பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்த எஸ்தர் மகன் நிக்லோஸ் (28), சேசு மகன் பாஸ்கர் என்ற பிரகாஷ் (45) மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 29ஆம் தேதி தூத்துக்குடி திரேஸ்புர்த்திலிருந்து மீன் பிடிக்க பைபர் படகில் கடலுக்குள் சென்றார்களாம்.
இவர்கள் 3பேரும் கடந்த 1ஆம் தேதி வரை கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர்கள் தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 3மீனவர்களும் இன்று காலை 6 மணி அளவில் பைபர் படகு எஞ்சின் பழுது காரணமாக கடல் மற்றும் நீரோட்டத்தில் ராமேஸ்வரம் பகுதி பாம்பனுக்கும் இடையே கரை ஒதுங்கினார்களாம்.
அதன்பின் 3மீனவர்களும் தங்களது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


